கடற்பரப்பில் மீட்கப்பட்ட ட்ரோன் குறித்த தகவல் – UPDATE

ByEditor 2

Jan 3, 2025

திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் ட்ரோனினால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என அரசு தெரிவித்துள்ளது. ட்ரோன் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு இலங்கை விமானப்படை தளபதியிடம் தனது இறுதி அறிக்கை ஒப்படைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இலங்கை மீனவர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், ஒரு இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதுடன், பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையெ ட்ரோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சுமார் இரண்டு வாரங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையின் பாதுகாப்பில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டிற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட ட்ரோன் சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை முக்கிய தளங்கள் பேணப்படும் திருமலையில் இந்திய ட்ரோன் மீட்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *