தென் கொரிய விமான விபத்து: இலங்கை அரசு இரங்கல்

ByEditor 2

Dec 29, 2024

தென் கொரியாவின் (South Korea) முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, சம்பவத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் காயங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், “இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இழப்பை சமாளிக்கும் தைரியத்தை அவர்கள் பெறட்டும்.

மேலும், காயமடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளது. 

 தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில் இருவரைத் தவிர ஏனைய பயணிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *