தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், இருவரைத் தவிர அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எஞ்சியுள்ள சடலங்களை மீட்க மீட்பு குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.
இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒரு பயணி மற்றும் ஒரு விமான ஊழியர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.