மகனுக்காக அனைத்தையும் இழந்து கண்ணீர்விட்ட தந்தை..
யார் இந்த நிதிஷ்குமார் ரெட்டி? ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சர்வதேச சதமடித்த மகன் நிதிஷ்குமார் ரெட்டி குறித்து பேசுவதற்கு வார்த்தையில்லாமல், நாதழுதழுக்க பதிலளித்த தந்தை முத்தியாலா ரெட்டி, உத்வேகம் தரும் தந்தையாக நிமிர்ந்து நிற்கிறார்.
“எல்லோரை போலவும் நானும் பொறுப்புகளை உணராத ஒரு சிறுவனாகத்தான் இருந்தேன், ஆனால் எனக்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்ட என் தந்தை ஒருநாள் பணப்பிரச்னையால் அழுதுகொண்டிருந்ததை பார்த்தபிறகுதான், நான் இப்படி இருக்க கூடாது என்பதை நானே புரிந்துகொண்டேன்”
உங்களுடைய உயர்வுக்காக ஒருவர் அனைத்தையும் இழந்துவிட்டு பக்கபலமாக நிற்கிறார்கள் என்றால், உங்களால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு நிதிஷ்குமார் ரெட்டி ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளார்.
இதை அவர் எளிதாக எட்டிவிடவில்லை, தன்னுடைய தந்தையின் அர்ப்பணிப்புக்காக தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளார் நிதிஷ்குமார் ரெட்டி.“யாருடைய கதையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவரவரே ஹீரோவாக இருப்பார்கள், ஆனால் நிதிஷ்குமார் ரெட்டியின் கதையில் அவருடைய தந்தை முத்தியாலாதான் ஹீரோ”