ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பிணர்கள் கொழும்பில் உள்ள ஈரான் கலாசசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரசல் மற்றும் ஈரானிலில் வருகை தந்த அறிஞர் குஜ்ஜத் இஸ்லாம் ஹர்த்தகப் தலைமையிில் கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தில் 26.12.2024 நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் சிரேஷ்ட உப தலைவர்களுள் ஒருவரான எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான் மீடியா போரத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் மீடியா போரத்தின் 975 உறுப்பிணர்கள் நாடு பூராவும் உள்ளது கடந்த கால செயற்பாடுகள் மற்றும் ஏற்கனவே ஈரான் தூதுவர் ஆதரவுடன் மகளிர் நிகழ்வுகள் தேசிய தினங்கள் கலந்து கொண்டு கடந்த காலத்தில் ஊடக சுற்றுலாவுக்கு ஈரான் நாட்டுக்கு எமது ஒரு சில உறுப்பினர்கள் சென்று வந்ததாகவும் பாலஸ்தீன ஆதரவு கூட்டங்களை கொழும்பில் பலஸ்தீன் துாதுவரை அழைத்து தமிழ் சிங்கள் பேராசிரியர்களை அழைத்து கூட்டங்களை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.