காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கை காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக சோதனைச் சாவடிகளை அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மகவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி மகாவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகளின் ஆபத்தை எதிர் நோக்கும் கிராம சேவகர் பிரிவுகள் சிலவற்றில் 12 சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சாவடிகள் சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ளன.
இந்நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் உடனடியாக சிவில் பாதுகாப்பு படையினரை இச்சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.