உங்க கால்களை வலிமையாக்கணுமா?

ByEditor 2

Dec 27, 2024

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் இளைஞர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நம்முடைய உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது ஒருவரின் கடமையாகவுள்ளது.

ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் சில உடற்பயிற்சிகளும், ஆரோக்கியத்தை இன்னும் உறுதியாக்குகிறது.

மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடும் ஒருவர், எப்போதும் அவருடைய கால்களை வலுவாக்க வைத்துக் கொள்வது அவசியம்.

அந்த வகையில், கால்களை வலிமையாக்கும் உணவுகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

 கால்களை வலிமையாக்கும் உணவுகள்

1. கிரீக் யோகர்ட் என்பது அனைத்து அமினோ ஆசிட்ஸ்களை கொண்ட ப்ரோட்டீன் நிறைந்த உணவாகும். இதில் வழக்கமாக நாம் சாப்பிடும் யோகர்ட்களை விட கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கும். ஃப்ளேவர்ட் வெரைட்டிகளில் பெரும்பாலும் அதிக சர்க்கரை காணப்படும். இதனால் டயட்டில் இருப்பவர்கள் கவனத்துடன் சாப்பிட வேண்டும்.

2. பாதாம் பருப்புகளில் ப்ரோட்டீன், பாலிஃபினால்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை கால்களை வலிமையாக்குவதுடன், உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவி செய்கிறது.

3. கோழியின் நெஞ்சு பகுதியானது அதிக ப்ரோட்டீன் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய கால்கள் வலிமையாகும். அத்துடன் உடல் அமைப்பை லீனாக பராமரிக்கும்.

4. டோஃபு (Tofu) என்பது சோயா சார்ந்த புரத மூலமாகும். அசைவ உணவுகளை விரும்பாதவர்கள் இதனை சாப்பிடலாம். இதனை அடிக்கடி சாப்பிடும் ஒருவருக்கு கால்கள் வலிமையாக இருக்கும்.

5. “குயினோவா” என்பது ஒரு முழுமையான தாவர ப்ரோட்டீனாகுத். இதனை மேலைத்தேய நாடுகளில் அதிகமாக சாப்பிடுவார்கள். சிறுதானியம் வகைகளில் ஒன்றாக இருப்பதால் இதில் அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இது கால்களை வலிமையாக்கி தசை மீட்புக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் எனர்ஜியை கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *