சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை – சிவராஜ்குமார்

ByEditor 2

Dec 26, 2024

நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவில் சிறுநீர்ப்பை அகற்றம் அறுவை சிகிச்சையை முடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நடிகர் சிவராஜ்குமார்.

இவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதே போன்று நடிகர் தனுஷ் நடித்து வெளியான “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிறுநீர்ப்பை அகற்றம்

இவ்வளவு பிரபலமாக இருக்கும் நடிகர் சமிபக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறியிருந்த நிலையில் கடந்த வாரம், பெங்களுரில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 25 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது.”எனக் கூறியுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்காவில்அறுவை சிகிச்சை முடிந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது சிறுநீர்ப்பை அகற்றப்பட்டுவிட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *