உலக வரலாற்றில் இருண்ட நினைவை சேர்க்கும் வகையில் இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த இந்நாட்டு மக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன.
காலை 6.58 மணியளவில் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட சுனாமி அலைகளில் மிக பலமான அலைகள் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மணிக்கு காலை 09.26க்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையை தாக்கியது.
இந்த ஆழிப்பேரலை, இலங்கையில் சில நிமிடங்களில் 35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தது, என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கூட நேரத்தை விட்டுவிடாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்தது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பெரும் சோகத்தின் மத்தியில் மறைந்த அன்பர்களின் நினைவாக ஆண்டுதோறும் மௌன அஞ்சலி இடம்பெற்று வருகிறது.
மேலும், மறைந்த தங்களின் உறவுகளை விளக்கு ஏற்றி நினைவு கூற உறவினர்களும் மக்களும் மறக்கவில்லை.
சுனாமி அனர்த்தம் காரணமாக பெரெலிய ரயில் நிலையத்தில் இடம்பெற்ற விபத்திற்குள்ளான ரயில் பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்களின் நினைவாக இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்த வரை விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
பெரெலிய சுனாமி பேரிடரில் சிக்கிய ரயிலின் என்ஜினை பயன்படுத்தி இந்த ரயிலை இயக்குவது சிறப்பு.
ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் அந்த ரயில் நிறுத்தப்பட்டு சுனாமி நினைவேந்தல் தளத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக 2 தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் “தேசிய பாதுகாப்பு தினம்” நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், காலி “பெரெலிய சுனாமி நினைவேந்தல்” நிகழ்வும் இடம்பெற்றது.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு இன்று காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தலைமையில் இடம்பெற்றது.
சுனாமி அனர்த்தத்துடன் நிகழ்ந்த உலகின் மிக மோசமான ரயில் விபத்து பற்றிய நினைவு இலங்கையர்களின் இதயங்களை விட்டு என்றும் மறையாது.