பாதாள உலகில் சம்பளம் வாங்கும் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர்

ByEditor 2

Dec 26, 2024

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்திருந்தார்.

இன்று (26) தெரண தொலைக்காட்சி அலைவரிசையூடான BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு முன் வெளிப்படுத்த முடியாது என அங்கு அவர் சுட்டிக்காட்டினார்.

“பாதாளம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் கீழ் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர்.
ருவன்வெல்லவில் உள்ள முழு பொலிஸ் படையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருந்தது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த தீர்மானத்தினை எடுக்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, அவிசாவளையில் ஒரு குழுவும் உள்ளது, அவர்கள் ஒரு வலையமைப்பின் ஊடாக கோர்ந்துள்ளனர். பாதாள உலக பணம் பொலிஸாருக்கும் செல்கிறது..”

“நாங்கள் பொலிஸ் மா அதிபரை அழைத்து வந்து கலந்துரையாடினோம். இப்போது பாதாள உலகத் தலைவர் மத்துகமவில் இருக்கிறார்.”

“இதை ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது கடினம். போதைப்பொருள் மற்றும் பாதாள உலகம் தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபரிடம் உள்ளது.”

“பொது ஆணையை மதிக்குமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.”

“நேற்று முன்தினம் மீண்டும் பாதாள உலக சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதில் குறுகிய சந்தர்ப்பவாத அரசியலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *