பொதுவாக தற்போது வேகமான உலகத்தில் இளைஞர்கள் பலர் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அழுத்தங்கள் மனநலப் பிரச்சினைகளை நாளடைவில் அதிகப்படுத்தும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவான முதுமையை அடையலாம். வேகமான உலகில், வேலை, கல்வி சார்ந்த அழுத்தங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் என பல அழுத்தங்கள் இளைஞர்களை பாதிக்கின்றன.
இந்த நிலையான அழுத்தம் பல்வேறு உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்தும். தொடர் கவலை, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற வெளிபாடுகள் மனநலனை பாதிக்கின்றன.

“மன ஆரோக்கியம்” என்பது உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியது என நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் பழகுதல், முடிவுகள் எடுத்தல், திறன் வெளிபாடு ஆகிய இடங்களில் தடுமாறுவார்கள்.
நல்ல மன ஆரோக்கியத்தைப் பேணுவது, நீண்ட காலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு இன்றியமையாததாகும். இதனை ஆரம்ப காலங்களில் சரிச் செய்யாவிட்டால் ஆரம்ப கால முதுமை மற்றும் நாள்பட்ட நோய்களை ஏற்படவிடாமல் தடுக்கும்.
அந்த வகையில் இளமை காலங்களில் வரும் மன அழுத்தம் பிரச்சினைகளை எப்படி சரிச் செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மன அழுத்தம் பிரச்சினையை சரிச் செய்யும் வழிகள்
1. உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை குறைக்கும். மன ஆரோக்கியமும் நாளடைவில் மேம்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. உடற்பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடுகிறது இது மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மாற்றியமைக்கும்.

2. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் கூட மன அழுத்தம் பிரச்சினை கட்டுக்குள் வரலாம். மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
3. மன ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு தரமான தூக்கம் அவசியம். மோசமான தூக்க முறைகள் மன அழுத்தம் பிரச்சினையை அதிகப்படுத்தும். வயதான தோற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். ஒரு இரவுக்கு 7-9 மணிநேர தூக்கத்தை குறிக்கோளாக வைத்து தூங்கினால் இவைகளிலிருந்து தப்பிக்கலாம்.

4. தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகள் மன அழுத்தம் பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தாக்கமம் செலுத்தும் இது போன்ற பிரச்சினைகள் நாளடைவில் குணமடையும். இளமையில் முதுமை பிரச்சினையும் இருக்காது.
5. வலுவான சமூக உறவுகளை கட்டியெழுப்புவதும் பராமரிப்பதும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும். முடிந்தவரை தனியாக இருப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த தொடர்பாடல் அவசியம்.

6. சிகிச்சை அல்லது ஆலோசனை போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும். மனநல குறைபாடுகளை அவ்வப்போது சரிச் செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் பார்க்காவிட்டால் இது நாளடைவில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
7. உடல் ஸ்கேன், கவனத்துடன் சாப்பிடுதல் மற்றும் புத்தகம் வாசிப்பது போன்ற நுட்பங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றது. வயதான செயல்முறைகள் மெதுவாக குணமடைந்து இளமையாக இருப்பீர்கள்.