விளம்பரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை

ByEditor 2

Dec 25, 2024
Happy kids jumping together during a sunny day

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிசம்பர் முதலாம் திகதி கூடிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

“குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம். அதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன. கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி 1 முதல் இதை அமுல்படுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *