பொலிஸாரை ஏமாற்றிய சிறுமி

ByEditor 2

Dec 25, 2024

காலி, பத்தேகம பகுதியில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான தனது காதலியை பொய்யான காரணத்தை கூறி விளையாடுவதற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் ஈடுபட்ட 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் சனத் நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு

கடந்த 18ஆம் திகதி காலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் பத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், மறுநாள் காலை சிறுமி பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பாழடைந்த வீடொன்றில் தனியாக தங்கியிருந்தாக தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தகவலில் உண்மையில்லை என சந்தேகித்த பொலிஸார் அவர் இரவைக் கழித்ததாகக் கூறப்படும் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு யாரும் தங்கியதற்கான அறிகுறிகளைக் காணாததால், அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொய்யான தகவல்

இதன்போது தான் கூறியது பொய் எனவும் காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் சந்திக்க சென்றதாகவும் அங்கு கூறியுள்ளார்

நீண்ட நாட்களாக காதலனுடன் உறவில் இருந்ததால் கடந்த 18ம் திகதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தன்னை ஏமாற்றி அவரது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காதலனின் வற்புறுத்தல் காரணமாக தான் பொய் சொன்னதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான காதலன், பத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *