காலி மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழில்சார் பெண்களும் தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார் பெண்களும் இருப்பதாக மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. சஞ்சீவனி கூறுகிறார்.
காலியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.