நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்றிரவு (20) நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றதுடன், நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.