கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட 5 கோடி பெறுமதியிலான உபகரணங்கள்

Byadmin

Dec 21, 2024

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (20.12.2024) வெள்ளிக்கிழமை, இலத்திரனியல் உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலத்திரனியல் உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் 5 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலான சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் இருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றத்திற்கு தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *