கண்களில் பார்வைத்திறனை அதிகப்படுத்தணுமா?

ByEditor 2

Dec 16, 2024

கண்கள் நம் உடல் பாகங்களில் மிகவும் முக்கியமாகும். குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேல் நமது கண்களை பராமரிப்பது அவசியம். இதற்கு பல வழிகளில் நாம் முயற்ச்சி செய்யலாம்.

ஆனால் சிறந்த மருந்து உணவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு வேலையை செய்யும் போது அதற்குரிய சக்தியை கொடுப்பது அவசியம்.

அப்போது தான் அவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே இந்த பதிவில் கண்களின் பார்வை திறனை மேன்படுத்த உதவும் உணவுகளை இந்த பதவில் பார்க்கலாம்.

கண் பார்வையை மேன்படுத்த உதவும் உணவுகள்

பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள்: 5 ஊறவைத்த பாதாம் மற்றும் ஒரு தேக்கரண்டி சூரியகாந்தி விதைகளை தினமும் உணவிலோ அல்லது உங்களுக்கு பிடித்தவாறோ நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்ம மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை  கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் முக்கியமாகும்.

கேரட்: கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதை உணவில் நீங்கள் பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவில் ஏபிசி ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.

கேரட் அமிகமாக வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது ஆரோக்கியமான கண்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் இருக்கும் கண்களின் பார்வைக்கு மிகவும் முக்கியம். இந்த பழத்தை நீங்கள் உணவுடன் எடுத்துக்கொள்வது முக்கியம்.

இது உங்கள் உடலுக்கு வைட்டமின் சி அதிகதாக வழங்கும். இது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

முட்டை: லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற புரதங்கள் மஞ்சள் கருவுடன் முட்டையில் காணப்படுகின்றன.

இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. முட்டையை தினதும் இரண்டு எடுத்துக்கொள்வதால் அது உடலில் உங்கள் கண் பார்வை மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *