ரயில் விபத்து தொடர்பில் பணி நீக்கம்

ByEditor 2

Dec 16, 2024

பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ரஜின புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் தவறான பாதையில் ஓடி சாகரிகா ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு விசாரணையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.

குறித்த புகையிரதங்களுக்கு பதிலாக மாற்று ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *