viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால்

ByEditor 2

Dec 15, 2024

பொதுவாக பருவகால மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் பெருகும் துண்ணங்கிகளுள் கடுமையான வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் எனப்படுகின்றது. 

அதன் தாக்கம் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் பாதிக்கக்கூடும். மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பதை பார்க்க முடியும்.

அதிகமான காய்ச்சல், உடல் வலி, சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த வைரஸ் காய்ச்சல் நம் உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அதன் அறிகுறிகள் பொதுவாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். 

ஒவ்வொருவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வைரஸ் காய்ச்சல்கள் காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலமே பெரும்பாலும்  பரவுகின்றன.

பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள், வைரஸ் தன் தாக்கத்தின் அறிகுறிகள் வெளித்தெரிய ஆரம்பித்துவிடும். 

வைரஸ் தொற்று ஏற்பட்டால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலி போன்ற அசௌகரியங்கள் ஆரம்பத்தில் ஏற்படும். 

மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி நலிவடைந்த நிலையில் இருக்கும். 

வைரஸ் காய்ச்சல் வகைகள்

சுவாச வைரஸ் காய்ச்சல்

ரத்தக்கசிவு வைரஸ் காய்ச்சல்

இரைப்பை குடல் வைரஸ் காய்ச்சல்

எக்ஸாந்தேமாட்டஸ் வைரஸ் காய்ச்சல்

நரம்பியல் வைரஸ் காய்ச்சல்

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

103° F அல்லது 104°F வரை செல்லக்கூடிய உயர்தர காய்ச்சல்

தொண்டை வலி

தசை அல்லது மூட்டு வலி

லேசானது முதல் கடுமையானது வயிற்றுப்போக்கு

தலைவலி

மூக்கு ஒழுகுதல்

நீர்ப்போக்கு வாந்தி / குமட்டல்

தலைச்சுற்று கண் சிவத்தல்/எரிதல்

தோல் வடுக்கள்

களைப்பு

குளிர்

முக வீக்கம்

பசியின்மை 

அதிக குளிர் 

தோலில் வடுக்கள்

போன்ற முக்கிய அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் வைரஸ் செல்களை அதிகமதாக தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தையே  வைரஸ் காய்ச்சல் பாரியளவில் பாதிக்கும். 

ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. 

இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொற்றாக பார்க்கப்படுகின்றது. 

சிகிச்சைகள்

வைரஸ் காய்ச்சல்  ஏற்பட்டால், உடல் வறட்சியடையாமல் இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றார்கள். 

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரஸ் தொற்றுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, காரணம் அவை பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே வினை புரியும் தன்மை கொண்டவை, வைரஸ்களுக்கு எதிராக இவை செயற்படாது. 

வைரஸ் தடுப்பு மருந்துகள் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான நோய்களை நிர்வகிக்கப் பயன்படுகின்றன.

எப்படி தடுப்பது? 

வைரஸ் காய்ச்சல் மற்றவருக்கு பரவாமல் இருப்பதற்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தான் உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, பகிர்ந்து கொள்ளக்கூடாது.

கிருமிகள் பரவுவதை தடுக்க, அவ்வப்போது கழுவ வேண்டும். வீட்டில் பழ சாறுகள் மற்றும் இயற்கை பானங்கள் அவ்வப்போது கொத்தமல்லி டீ நீர், வெந்தய தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்த கஞ்சி குடித்து வருவது நல்லது.

கூட்டமான இடத்தில் இருப்பது மற்றும் மாறிவரும் வானிலை ஆகியவற்றால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால் சன நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வதால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். 

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பிரவேசிக்கும் போது முகக்கவசம் அணிவது வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். 

அடிக்கடி கை கழுவுவது, சுத்தமாக இருப்பது, நோய்வாய்ப்பட்டவர்களிடம் நெருக்கமாக பழகாமல் இருப்பது போன்ற விடயங்களில் அக்கறை செலுத்துவதும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். 

மேலும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்த காய்ச்சல் ஏற்படும்  சீசனை வெற்றிகரமாக கடக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *