553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது – அதானி குழுமம்

ByEditor 2

Dec 11, 2024

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது.

இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்தியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் தனது உள் மூலதன இருப்புக்களை கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பங்கு அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி பெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *