உயிர்காப்பு பிரிவினறால் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள்

ByEditor 2

Dec 11, 2024
10617087 - healthy lifestyle: man and woman are swimming together in open water

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந்த அனர்த்தம் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு தம்பதிகளை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்.

உயிர் தப்பிய வெளிநாட்டவர்கள் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 29896 லசந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் 19342 சங்கீத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 103992 துலஞ்சய ஆகியோரே வௌிநாட்டு  பிரஜைகளை காப்பாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *