தேங்காய் தண்ணீரை குடிப்பவரா நீங்கள்?

ByEditor 2

Dec 10, 2024

ஆரோக்கிய பானமாக இருக்கும் தேங்காய் தண்ணீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலத்தில் தேங்காய் தண்ணீர் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. 

இதில் அதிகமாக சத்துக்கள் உள்ள நிலையில், மக்கள் பலரும் இதனை விரும்பி உட்கொள்கின்றனர். ஆனால் தேங்காய் தண்ணீரை பருகும் முன்பு சில காரியங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

ஆனால் தேங்காய் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் தேங்காய் தண்ணீர் பருகுவது உடம்பிற்கு ஆரோக்கியம் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் மருத்துவர்கள் கூறுகையில், தேங்காய் தண்ணீர் குடிக்கும் முன்பு ஏதாவது சாப்பிடுவது அவசியமாகும். அவ்வாறு இல்லையெனில் குமட்டல் மற்றும் அமைதியின்மை பிரச்சனை ஏற்படுமாம்..

காலை அல்லது மதிய உணவிற்கு பின்பு தேங்காய் தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு பின்பு தேங்காய் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

அதிலும் நோயாளிகளுக்கு தேங்காய் தண்ணீர் கொடுக்கும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமாம். ஏனெனில் காலை உணவிற்குப் பின்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதுவே விளையாட்டு வீரர்கள் பழச்சாறுடன் தேங்காய் தண்ணீர் கலந்து குடிக்கலாம். பாலுடனும் சமஅளவு கலந்து குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *