சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அகற்றணுமா? 

ByEditor 2

Dec 9, 2024

நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. 

தற்காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை நம் உடலில் நச்சுகள் சேருவதற்கு முக்கிய காரங்களாக காணப்படுகின்றது.

இது எல்லை மீறும் பட்சத்தில் பல்வேறு ஆராக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்குவது மிக முக்கியம்.

உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் நமது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், இரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றும் பணியை செய்கின்றது. 

சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயமும் வலுவாக அதிகரிக்கும்.

அந்தவகையில் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் துணைப்புரியும் பழங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க சிட்ரஸ் பழங்கள் பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக எலுமிச்சை சாறு மற்றும் ஆரஞ்சு பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகின்றது.

மேலும் உடல் முழுவதும் திரவங்களை சமநிலைப்படுத்தி சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இந்த பழங்கள் பெரிதும் துணைப்புரிகின்றது.

மாதுளை

சிறுநீரக நச்சுக்கனை வெளியேற்றி சிறுநீரக பாதிப்பு அபாயத்தைக் குறைப்பதில் மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது.

இது சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமநிலையில்  வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றது.

தர்பூசணி

தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து செறிந்துள்ளதால்,சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்குவதில் இவை ஆற்றலுடன் செயற்படுகின்றது.

சிறுநீரக பாதிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் இதில் காணப்படும் வேதிப்பொருட்கள் உதவுகின்றது. குறிப்பாக லைகோபீன் கலவை சிறுநீரக வீக்கம் ஏற்படுவதை தடுக்கின்றது. 

சிவப்பு திராட்சை

சிறுநீரக நச்சுக்களை வெளியேற்றுவதில் சிவப்பு திராட்சை பெரிதும் உதவுகின்றது. தேலும் சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கும் ஃபிளாவனாய்டுகளும் இதில் செறிந்து காணப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி சிவப்பு திராட்சையில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால், சிறுசீரக தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கின்றது.

இதில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள் இரத்தத்தை சுத்திகரிப்பதிலும் சிறப்பாக செயற்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *