இயக்குனர் அட்லீ தனது காதல் தனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பிரியா அட்லீ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா.இவர் இயக்குனர் அட்லீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ‘சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தவர், அட்லீ இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், அண்மைக்காலமாக அட்லீயுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
அட்லீயுடன் இணைந்து ‘ஏ ஃபார் ஆப்பிள் (A for apple)’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அர்ஜூன் தாஸ் நடித்திருந்த ‘அந்தகாரம்’ திரைப்படத்தைத் தயாரித்தார்.
அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ள அட்லீ, ப்ரியாவை ஒரு லக்கி சார்ம் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் மீர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.