முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல்.

Byadmin

Dec 5, 2024

இன்று வியாழக்கிழமை 2024 டிசம்பர் 5ஆம் திகதி கொழும்பில், ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சிலின் நிறைவேற்றுக்குழுவின் சிரேஷ்ட உலமாக்கள் (Ex officio of Sri Lanka Sharia Council), சர்வதேச மனித உரிமைகள் இயக்கம் (International Human Rights Movement), ஐக்கிய சட்ட விழிப்புணர்வு இயக்கம் (United Law Awareness Wings), லங்காபேஸ்.காம் செய்தியாளர் குழு (Lankabase.com Media Team) ஆகிய நான்கு அமைப்புகள் மற்றும் M.H.M. நியாஸ் (Chairman, Media LING) இணைந்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடாத்தியது.

இந்த கலந்துரையாடல், சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் உப தலைவர் அல்-ஹாஜ் எஸ்.டி.எம்.பாஹிம், மற்றும் ஐக்கிய சட்ட விழிப்புணர்வு இயக்கப் பிரிவின் இயக்குனர் வழக்கறிஞர் அல்-ஹாஜ் எஸ்.எம். வை.எம். நியாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காரணிகள், சமூகத்தில் ஏற்பட்ட இடைவெளிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட தடைகள், மற்றும் சமூகவியல் பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது.

கலந்துரையாடல் முடிவில், முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அமைப்புகளின் இணைந்த இப்பாரிய முயற்சி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *