முகேஷ் அம்பானியின் மகள் இஷா குடும்ப சொத்துக்களை நிர்வகிப்பதிலும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டை மேற்பார்வையிடுவதிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஆசியாவின் முக்கிய பணக்காரரின் மகளான இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டை நிர்வகித்து வருகிறார்.
தற்போது 33 வயதை தொடும் இஷா அம்பானிக்கு RRVL இல் ஒரு உயர் நிர்வாகத்திலும், ரிலையன்ஸ் ரீடெய்லை உலகளவில் முக்கிய பெயராக மாற்றுவதிலும் முழு ஈடுபாடு உள்ளது.
RRVL-ல் 18,500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில் மளிகைப் பொருட்கள், உடைகள், மின்னணுவியல் மற்றும் மருந்துகள் வழங்குகிறன். இதில் சிலவற்றை ஆன்லைன் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையில், சமீபத்தில் ஆன்லைன் வழியாக தன்னுடைய பொருட்களை விற்பனை செய்வதற்காக நயன்தாராவும் இஷா அம்பானியுடன் கைக்கோர்த்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் பிராண்டுகள்
இந்த நிலையில், இஷா அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் ரீடெய்லின் கீழ் பிரபலமான பிராண்டுகளில் AJIO, Tira, Dunzo, Netmeds, Reliance Digital மற்றும் Reliance Trends ஆகிய நிறுவனங்கள் அடங்குகின்றன.
இவருக்கு மாதச் சம்பளமாக ₹35 லட்சம் கொடுக்கப்படுகின்றது. இதன்படி, இஷா ஆண்டுக்கு சுமார் ₹4.2 கோடி வரை சம்பாரிக்கிறார். இந்த தொகை நிறுவனப் பங்குகளிலிருந்து வரும் வருமானம் தவிர்த்து வழங்கப்படுகின்றது.
ரிலையன்ஸ் ரீடெய்லின் தற்போதைய மதிப்பீடு ₹8,361 லட்சம் கோடி இருக்கும் என்றும் இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
புதிய தொழில்நுட்பம், பெரிய கனவுகள்
இஷா நிர்வகிக்கும் கம்பனிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் கைக்கோர்த்து இந்தியாவின் சில்லறை வர்த்தக எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் முயற்சியில் இருக்கிறது. அம்பானியின் தலைமை ரிலையன்ஸ் ரீடெய்லை ஒரு உலகளாவிய சக்தியாக மாற்ற இந்த முயற்சி உதவியாக இருக்கிறது.
இதுவே அவரின் பொருட்களை உலகளவில் கொண்டு செல்லும் வழியாக உள்ளது. இவ்வளவு திறமைகளை தன்வசம் கொண்டிருக்கும் இஷா அம்பானி சர்வதேச பள்ளி ஆரம்ப கல்வியை முடித்து விட்டு, யேலில் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் ஸ்டான்போர்ட் GSB இல் MBA பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.