அரச மருத்துவமனை மருந்து பொருட்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ByEditor 2

Dec 5, 2024

அரச மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் அற்ற, தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவமனைகளில் திடீரென மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அவசரமாக கொள்வனவு செய்யப்படுவதாக மருத்துவமனை பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு  

அண்மையில் மருந்துப் பொருள் கையிருப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக மருந்துப் பொருட்களின் தரம் குறித்து மதிப்பீடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்து வகைகள் கொள்வனவு செய்வது குறித்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *