எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அறிவியல் உண்மை.

ByEditor 2

Dec 4, 2024

பொதுவாக சிலர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கையில் கிடைப்பவைகள் அனைத்தையும் சாப்பிடுவார்கள். அனைத்தையும் சாப்பிட்ட பின்னர் கடைசியாக பல் துலக்கி, குளிப்பார்கள்.

மாறாக நாம் தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

காலையில் பல் துலக்காமல் ”Bed Coffee” என்ற பெயரில் காஃபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், பல் துலக்காமல் எந்தவொரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது, எதையும் குடிக்கக்கூடாது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இப்படி இருக்கும் பொழுது காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் உறுதிச் செய்துள்ளது.

அந்த வகையில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. அதே போன்று காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.       

பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?

1. காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பலவகையான நோய்களைத் தீரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

2. உடல் பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் தினமும் வெது வெதுப்பான நீரை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்

3. சிலருக்கு எந்தவித காரணமும் இன்றி பல் சொத்தை ஏற்படும். இதனை தடுக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

4. இரவு சாப்பிட்ட உணவுகள் உடலில் செரிமானம் அடையாமல் இருக்கும். இதனை தண்ணீர் சரிச் செய்கிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

5. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு பருவகால மாற்றங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

6. பளபளப்பான சருமம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் தண்ணீர் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அத்துடன் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றாலும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *