குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் ஏன் சாப்பிடக் கூடாது? தெரிந்து கொள்ள வேண்டிய காரணம்

ByEditor 2

Dec 3, 2024

குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குளிர் காலம்

பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நோய்களும் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. ஆம் குளிர்ந்த காற்று, பனி, மழை இவற்றினால் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகின்றது.

குளிர்காலங்களில் நமது உடலை எப்பொழுதும் சூடாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். அவ்வாறு நாம் வைத்துக் கொண்டால் தான் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்.

மேலும் இவ்வாறான காலங்களில் முடிந்தவரை சூடான உணவுகளையே தான் உண்ண வேண்டும். ஆனால் ஒருசிலர் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவிற்கு அடிமையாகியும் உள்ளனர்.

குளிர்காலங்களில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதா? என்பதையும் இதனால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்று கூறிவிட முடியாது. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், ஒரு நாளைக்கு எவ்வளவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.

ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

குளிர் காலங்களில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வயிறு வீக்கம் பிடிப்பு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துவடன், செரிமான பிரச்சனையும் ஏற்படுகின்றது.

குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொண்டையில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஐஸ் கிரீம் எடுத்துக் கொள்வதால் உடலின் வெப்பநிலை குறைகின்றது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பிரச்சனை ஏற்படுகின்றது.

குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதில் இருக்கும் காஃபின் தலைவலியை ஏற்படுத்தும். இது தவிர மாரடைப்பு, நீர்ச்சத்துக் குறைபாடு, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *