ஜெயம் ரவி- ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தை

ByEditor 2

Nov 29, 2024

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

ஜெயம் ரவிக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதற்கு பதில் கொடுத்த ஆர்த்தி”விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்” என கூறியிருந்தார்.

இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்காக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நேரில் ஆஜராகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *