சமந்தா ரூத் பிரபுவின் தந்தை ஜோசப் பிரபுவின் மறைவுச் செய்தியை உருக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா
இவர் சென்னையில் ஜோசப் பிரபு- நினெட் பிரபு தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சமந்தாவின் தந்தை, ஒரு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர், சமந்தாவின் சினிமா வளர்ச்சிக்கு முழுவதும் அவருடைய குடும்பத்தினரின் ஆதரவு தான் காரணம் என்றும் அடிக்கடி பேட்டிகளில் பகிர்ந்திருப்பார்.
அந்த வகையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தையுடனான உறவு எவ்வாறு தன்னைப் பாதித்தது என்பது குறித்து சமந்தா வெளிப்படையாகப் பேசினார்.
தனது தந்தை, பல இந்திய பெற்றோரைப் போலவே, தன்னைப் பாதுகாப்பதாக நம்பினார் என்றும், தனது திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டார் என்றும் குறிப்பிட்டார்.
தந்தையின் இழப்பு
இந்த நிலையில், இன்றைய தினம் சமந்தாவின் தந்தை காலமானதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,”மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா” என்று உடைந்த இதய ஈமோஜியுடன் பதிவிட்டு, தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்.