குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ தூங்கும் போது இத பண்ணுங்க

ByEditor 2

Nov 28, 2024

 பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும்

குளிர்காலத்தில் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகின்றது.

சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும்.

குளிர்காலத்தில் பரவும் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். எனவே குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது சவாலான விடயமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் குளிர்காலங்கள் வந்து விட்டால் சிலருக்கு மூட்டுவலி வந்துவிடும், இதனால் கடும் அவஸ்தைப்படுவார்கள்.

அப்படியானவர்கள் குளிர்காலங்களில் மூட்டுவலியை எப்படி குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

 குளிர்கால மூட்டுவலியை குறைக்க டிப்ஸ்

1. குளிர்காலங்களில் உடலை பாதிக்காத படி சூடான ஆடைகளை அணிந்து கொண்டு தூங்க வேண்டும். ஏனென்றால் சிலருக்கு அதிகமான குளிர் காரணமாக மூட்டுவலி ஏற்படலாம்.

2. கைகள், கால்களின் தசைகளை நீட்டி சுருக்கும் எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை தினமும் செய்யலாம். குளிர்காலங்களில் அதிகமானவர்கள் இப்படியான பயிற்சிகளை செய்யாத காரணத்தினாலும் மூட்டுவலி ஏற்படலாம்.

3. எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆனாலும் குளிர்காலங்களில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது கட்டாயமாக பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, கொண்ட உணவுகளை எடுத்து கொள்வதால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மேம்படுகின்றது.

4. குளிர்காலங்களில் அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். இதுவும் மூட்டுவலியின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *