நுவன் துஷாரவை வாங்கிய IPL அணி!

ByEditor 2

Nov 25, 2024

2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

அதன்படி, நுவன் துஷார 1.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்..

அதேபோல்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கமிந்து மெந்திஸை 7.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் எஷான் மலிங்கவை 1.2 கோடி இந்திய ரூபாய்க்கும் வாங்கியுள்ளது. 

மேலும், துஷ்மந்த சமீராவை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 7.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதேவேளை, பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோருக்கு 75 இலட்சம் இந்திய ரூபா  அடிப்படை பெறுமதியாக வழங்கப்பட்ட போதிலும், அவர்களை வாங்க   எந்த அணியும் முன்வரவில்லை.

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *