பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

Byadmin

Nov 5, 2024

வீட்டுக்கு வீடு வாசல் படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம்

கணவன் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சினைகளை வீட்டுக்கு வெளியே விட்டு வர வேண்டும், பிரச்சினைகளோடு வீட்டு வரும் கணவனை மனைவி அன்புடன் ஆறுதல் வழங்க வேண்டும்.

வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசி விட்டு வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள் அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம்.

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது, மனைவி எதையும் இடித்து பேச கூடாது.

நீங்க வாங்கி வந்தது சரியில்லை என்று மனைவி குறை சொன்னால் எந்த நாய் சொன்னது என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை தன் தவறை ஒத்துக் கொண்டு சரி இனி பார்த்து வாங்குகிறேன் என்று சொல்லி விட்டால் பிரச்சினை முடிந்தது.

நீ செய்த சாப்பாடு சரியில்லை என்று கணவன் சொன்னால் உங்களுக்கு பிடிக்காட்டி நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.

இன்றைக்கு கொஞ்சம் சரியா சமைக்க முடியல நாளைக்கு நல்லா சமைக்கிறேன் என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.

மனைவி புது ஆடைகள் உடுத்தினால் இது நல்லா இருக்கு இந்த ஆடையில் அழகா இருக்காய் என்று சொல்லணும்.

கணவன் வெளியிலிருந்து வரும் போது ஏன் இப்படி வியர்த்திருக்கிங்க என்று அக்கறையோடு மனைவி விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் செல்லமாக அழைக்கணும், கணவனை மனைவி செல்லமாக கொஞ்சலுடன் அழைக்கணும்.

கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை.

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

BedRoom ல் அடிதடியாக பேசக் கூடாது கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது.

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.

முக்கியமாக கணவனும் மனைவியும் பேசும் வார்த்தைகளில் ஜாக்கிரதை இருக்க வேண்டும்.

தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கி விடும் அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.

முள்ளால் குத்தின காயம் ஆறி விடும் ஆனால் சொல்லால் குத்தினால் ஆறவே ஆறாது.

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.

ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

பெண்டாட்டி தானே சொல்லி விட்டு போகிறாள் என்றும் கணவன் தானே பேசட்டும் என்றும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் உள்ளம் துடிக்காது உடல் வலிக்காது ஊர் சிரிக்காது.

குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள் தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள் உங்கள் இல்லறம் செழிக்கும் வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *