வகுப்பறையில் அவள் என்னை பார்த்து சிரித்து விட்டாள்.சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தேன். டேய் ration கடையில சக்கரை கொடுக்கிறார்களாம்.. போய் வாங்கிட்டு வா என அம்மா கூறினார்கள்...இன்னது நான் போய் வரிசையில் நிக்கனுமா.. am a matriculation student , i cant என்று என் அம்மாக்கு தெரியாத englishல் கத்தினேன்... செருப்பு பிய்யும் நாயே.. இப்போ போல... அப்பா வந்தனோ சொல்லிருவேன் பாத்துக்க என அம்மாவின் அதிகார தோரனை தொடங்கிற்று... மஞ்ச பையை எடுத்து கொண்டு கிளம்பினேன்... அன்னைக்கு என்று பார்த்து ஊரே வரிசையில் நின்றது... கடுப்பாகி நின்றேன்... அப்போது அவள் cycleல் சென்றாள்.. அதே புன்னகையை விசி சென்றாள்.. ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறு பக்கம் கடுப்பு.. என்னை பார்த்து என்ன நினைத்து இருப்பாள்....ration கடையில் வரிசையில் நிற்கிறேன்.. விட்டிற்க்கு சக்கரை வாங்காமல்..மஞ்சள் பையை அம்மாவின் முகத்தில் விசி விட்டு .. என்னால எல்லாம் வரிசையில் நிக்க முடியாது.. அப்பாகிட்ட சொல்லிக்கோ என அம்மாவை திட்டி விட்டு விளையாட சென்றேன்...
மறு நாள் பள்ளியில் அவளை பார்த்தேன். பல நாள் விருப்பம், இன்று பேசி விட்டேன்... நேற்று சைக்கிளில் நீ சென்ற போது என்னை பார்த்து உதிர்த்த புன்னகை நன்றாக இருந்தது என்றேன்... எப்போ? என்றாள்... அதான் ration கடை கிட்ட...
நீ அங்கே இருந்தியா? என்று வியப்பு பார்வை பார்த்தாள்
ஆமாம் .. என்றேன்...
என் பாட்டி அங்க வரிசையில நின்னாங்க... அவங்கள பார்த்து சிரிச்சேன்.. பாவம் வயசான காலத்தில வரிசையில நின்னாங்க.. நான் விட்டிற்கு போய் bagய வைச்சுட்டு.. நான் வரிசையில நின்றேனே. உன்ன பாக்கலயே என்றாள்...
shock ஆகி நின்றேன்