உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்
- உங்கள் சண்டையை நீடிக்க விடாதீர்கள்
சண்டை போடாத கணவன் மனைவியே இருக்க முடியாது. உங்கள் மூட் சரியில்லாத போது, உங்கள் வாழ்க்கைத்துணையிடம் சள்ளென்று எரிந்து விழுவது சகஜம். ஆனால், ஏதோ எதிரியிடம் சண்டை போடுவது போல் வன்மத்தோடு சண்டை போடாதீர்கள். சண்டை முடிந்த பின் நீங்கள் கேட்கும் மன்னிப்பு, உங்கள் இருவர் இடையே கசப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
- தாம்பத்திய உறவை தவிர்க்காதீர்கள்
தாம்பத்திய உறவு உங்கள் உடல் சம்மந்தபட்டது மட்டும் கிடையாது. அது உங்கள் இருவர் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பை அதிகரிக்கும் தன்மையுடையது. உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தை, தாம்பத்தியத்தை மறுப்பதன் மூலம் காட்டாதீர்கள் .
- உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தை விமர்ச்சிக்காதீர்கள்
உங்களுக்கு எப்படி உங்கள் குடும்பம் முக்கியமோ, உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் அவருடைய குடும்பம் முக்கியம். தேவை இல்லாமல் அவரின் குடும்பத்தை விமரிசித்து, உங்கள் இருவர் இடையே சண்டையை தூண்டாதீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தை மதித்தால் தான் அவரும் உங்கள் குடும்பத்தை மதிப்பார்.
- பேசிக்கொள்ளாமல் இருப்பது
நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசாமல் இருக்கலாம் . உங்கள் வாழ்க்கைத்துணையோடு மட்டும் பேசாமல் இருந்து விடாதீர்கள். ஆளுக்கொரு மொபைல் போன், சோசியல் மீடியா என்று வாழும் தம்பதிகள் தான் அதிகம். உங்கள் வாழ்க்கைத்துணையோடு உங்கள் அன்பை பரிமாறி கொள்ளுங்கள் .
- பஞ்சாயத்திற்கு பெற்றோரை அழைப்பது
உங்கள் இருவருக்கும் உள்ள பிணக்கத்தை போக்கும் தன்மை உங்கள் இருவரிடையே மட்டும் தான் இருக்கிறது. மாறாக, பஞ்சாயத்திற்கு உங்கள் பெற்றோரை அழைத்தால், உங்கள் கணவன் மனைவி சண்டை விபரீத சண்டையாகிவிடும் .
உங்கள் திருமண வாழ்க்கையை சந்தோசமாக வைக்கும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அதே சமயம் , உங்கள் திருமண வாழ்க்கையை நிர்மூலமாக்கும் தன்மையும் உங்கள் இருவரிடம் தான் இருக்கிறது. உங்கள் திருமண வாழக்கையை வரமாக போற்றினால், அது கொடுக்கும் சந்தோசம் அளப்பறியாதது .