இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னர் பதவி வகித்த கௌசல்ய நவரத்ன ராஜினாமா செய்ததன் பின்னர் அந்த பதவி வெற்றிடமாக இருந்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.