இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 116 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, தனது முதல் இன்னிங்சை நேற்று ஆரம்பித்த நியூசிலாந்து அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது 22 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
இந்நிலையில், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமான சில நேரத்தில் 88 ஓட்டங்களை பெற்றிருந்த போது அனைத்து விக்கெட்டுக்களையும் நியூசிலாந்து அணி இழந்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்பில் பிரபோத் ஜயசூரிய 6 விக்கெட்டுக்களையும், நிஷான்பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதற்கமைய, Following on முறையில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 03 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி இன்னும் 511 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.