இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை – இரு மெண்டிஸ்களும் சதம்

Byadmin

Sep 27, 2024

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் மற்றுமொரு இமாலய சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச அரங்கில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் 178 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதே மேற்படி சாதனையைப் படைத்துள்ளார்.

மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரராகி உள்ளார்.

இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான குசல் மெண்டிஸ் தனது 10 ஆவது சதத்தை இன்றைய போட்டியில் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய இரண்டாம் நாளில் 5 விக்கட்டுக்களை இழந்து 602 ஓட்டங்களுடன் தமது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 116 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *