கடவுச்சீட்டு பெற மக்கள் படும் துயரம்!

Byadmin

Aug 28, 2024

நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.

இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. எல்லாலே காசுதான்.. கடையில சாப்பிட்டு குடிக்க வேண்டிம்.. பணமும் முடிந்து விட்டது.
இறுதியாக, பாஸ்போர்ட் பெற மூன்று நாட்கள் வரை ஆகின்றது.
டோக்கன் கொடுப்பதாக கூறுகின்றனர் எப்படி என்று தெரியவில்லை.
எத்தனை நாட்கள்…? பணமும் முடிந்து விட்டது., இறுதியில் ஒருநாள் சேவை என கூறி 20 ஆயிரம் கேட்கிறார்கள்”

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் அறிவித்தது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அதன் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *