யார் இந்த தாஜுத்தீன்

Byadmin

Jul 13, 2024

ஆங்கிலேயர்கள் சூடானை ஆக்கிரமித்தபோது, ​​அவர்களுடன் இணைந்து பணியாற்ற அரபு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டது. 

ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற சூடானியர்கள் விரும்பாததால்,   குறித்த பணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. 

தாஜுத்தீன் என்ற ஒரே ஒரு சூடானியர் மாத்திரம் முன்வந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற தாஜீத்தீன், தலைநகர் கார்டூமில் பிரபல தேயிலை வியாபாரியாகவும் விளங்கினார்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலேய அரசுக்கு ஆதரவு தரும் படியும் நாம் உங்களுக்கு பாதுகாப்பு தருவோம்’ என்ற வாசகங்கள்  அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தாஜீத்தீனின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, மில்லியன் கணக்கான பிரதிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன.

சிறிது காலத்திற்குப் பிறகு, அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் சூடானுக்கு விஜயம் செய்தார். இந்த துண்டுப் பிரசுரங்களின் ஒரு கட்டைக் கண்ட அவர், இந்த விளம்பரம் யாருடையது என்று அதிகாரியிடம் கேட்டார்.

இவை சூடானியர்களின் ஆதரவை வென்றெடுப்பதற்காக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்’ என்றனர்.

அந்த ஜெனரல், இதில் என்ன உள்ளது தெரியுமா? என்று கேட்டுவிட்டு,

“தரமான தேயிலையை பெற்றுக்கொள்ள தாஜுத்தீனை நாடுங்கள்”  என்றுதான் உள்ளது என்றார்.  

இலவசமாக விளம்பரம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் வியாபாரிகள் விட்டுவிடுவார்களா?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *