சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் Clive Madande அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், Dion Myers 23 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Ravi Bishnoi 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் Shubman Gill அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றதுடன், Washington Sundar 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியாவை வீழ்த்தியது சிம்பாப்வே!
