இலங்கைக்கும் சீனா எக்சிம் வங்கிக்கும் இடையிலான இருதரப்பு கடன் நிவாரண ஒப்பந்தம் இன்று (26) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
4.2 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க இரு தரப்பும் இறுதி உடன்பாட்டை எட்டிய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சீனா – இலங்கை கடன் நிவாரண ஒப்பந்தம் கைச்சாத்து
