இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை

Byadmin

Jun 23, 2024

நடப்பு உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெறாமல் வெளியேறிய அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆடுகளத்தின் தன்மையை இலங்கை துடுப்பெடுத்தாளர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை எனவும் இதற்காக இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் இலங்கை குழாம் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போதிலும் ஆடுகளத்தை புரிந்துகொள்ள தவறி விட்டதாகவும் மெத்தியூஸ் கவலை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அணியின் மோசமான ஆட்டத்தை மன்னிக்க முடியாது எனவும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *