மதிப்புக்குரிய இல்லத்தரசிகளுக்கு!

Byadmin

Jun 22, 2024

உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் தினம் தினம் எத்தனை எத்தனை மில்லியன் கணக்கான வியர்வைத் துளிகளை சிந்தியிருப்பார்கள் என்பது சற்று எண்ணிப் பாருங்கள்…!

உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்களை மனமகிழ்ச்சியாக  வைப்பதற்காக எவ்வளவு கண்ணீர்த் துளிகள் சிந்தியிருப்பார்கள் என்று அவர்களின் கண்களை நெருங்கி வந்து பாருங்கள்…!

உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள்  உங்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் கடினமாக உழைத்திருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்…!

ஒவ்வொரு குடும்பத் தலைவனினதும் முதலும் முடிவுமான ஆசை தனது குடும்பம் மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் வாழ வேண்டும் என்பதாகும். 

காலையில் வெறுங்கையோடு வெளியே செல்லும் அவர்கள் மாலையில் பணத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாகும், தன் குடும்பத்தை கண்ணியமான வாழ வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கமாகும். 

பெரும்பாலான வீட்டுத் தலைவர்கள் வெளியுலகில் தாங்கள் படும் பாட்டையும், அனுபவிக்கும் வலிகளையும் வீ்ட்டில் சொல்ல விரும்ப மாட்டார்கள். 

மாறாக தங்களைப் பற்றியும் தங்களின் உழைப்பு பற்றியும் தங்கள் குடும்பங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றே விரும்புகின்றனர். 

ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் காலையில் எழுந்து வேலைக்கு செல்கிறான் என்றால், தன் பிள்ளைகுட்டிகளுக்கு வசிக்க இடமும் உண்ண உணவும், உடுக்க ஆடையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் என்பதை மறவாதீர்ள். 

நல்வழியில் பொருளீட்டி, குடும்பத்துக்கு உணவூட்டும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் அல்லாஹ்வின் அருளும் ஆசிர்வாதமும் என்றென்றும் உண்டவதாக.!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *