நோய், நொடிகள் சொல்லும் செய்தி

Byadmin

Jun 14, 2024

நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா?

அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன. 

மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன.

தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.

ஆசைக்கும், அதிகாரத்திற்கும், மற்றும் அகம்பாவத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றன. 

அட்டகாசங்கள், அநியாயங்கள் மற்றும் அடாவடித்தனங்களுக்கும் வேட்டு வைத்துவிடுகின்றன.

மதங்கள், சமயங்கள், மனித சட்டங்கள் மானிடத்தை சீர் செய்ததையும் இந்த நோய் நொம்பலங்கள் மானிடத்தை புடம்போட்டு சீர்செய்ததையும் ஒப்பிட்டுப்பார்த்தால் சூட்சும்ம தெரியவரும்.

மனிதனுக்கு பாடம் புகட்ட, படைத்த நாயகன் அவன் உதிரத்துக்குள் அனுப்பிவைத்த தூதர்களாகவும், தீர்க்கதரிசிகளகவுமே இந்த நோய் நொடிகளை நீங்கள் காணலாம்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *