ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!

Byadmin

May 27, 2024

ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!!இயற்கையை படைத்து…அவர்களை இயங்கவும் வைத்தான் !!அந்த வித்தைகாரன் பெயர்தான் – கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது ‘கணவன்’ !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது ‘மனைவி’ !
இருவரையும்….
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது ‘திருமணம்’ !!

அத்தோடு விட்டானா….?!!
‘காமம்’ என்றும்…
‘காதல்’ என்றும்…
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் …
அதன் இடையில்!!!

‘ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்’
அப்படியொரு பழமொழியை…
எவன் வைத்தான்… தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்…
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்…!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்…!!
பிரியமாக இருந்தோரெல்லாம்…
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
‘காதல்’ என்றால் என்னவென்று…
போதுமான விளக்கம் இல்லை!

குடும்பமென்றும்… குழந்தையென்றும்…
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்…
ஆகுமினி இப்படித்தான்…!

திருமணங்கள் மட்டும்
அங்கு முறிவதில்லை,
இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க…
மனிதன் பிரித்தானா? – இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ…
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை…
‘விவாகரத்து’ என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே இருந்திருக்கிறது…. இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை # 🙁

Cpd

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *