ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் எண்டர்சன்!

Byadmin

May 12, 2024

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் எண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
2003 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான எண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
தனது முகநூல் கணக்கில் பிரியாவிடை குறிப்பில், தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என எண்டர்சன் கூறியுள்ளார்.
41 வயதான எண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்க முடியும்.
ஜேம்ஸ் எண்டர்சன் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துப்படுத்தி 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19, இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *