வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்

Byadmin

Apr 29, 2024

வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது.

2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மலைநாடு, ஆயுர்வேத சிகிச்சை, ரயில் பயணங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் பயணிகளுக்கு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியமான காலை உணவு என்பனவும் இலங்கையின் தனித்துவமான சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினங்கள், தேநீர், கைத்தறி துணிகள், தோல் பொருட்கள், பழங்கள், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் போன்றனவும் இலங்கையின் சிறப்புகளாக CEOWORLD சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *