போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

Byadmin

Apr 16, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த தகவலை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவரது விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும் ஏப்ரல் 24 அன்று திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் ஈரானிய ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டங்களில் இந்தத் திட்டம் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *